/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு! அறவே இல்லை மக்கள் ஒத்துழைப்பு
/
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு! அறவே இல்லை மக்கள் ஒத்துழைப்பு
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு! அறவே இல்லை மக்கள் ஒத்துழைப்பு
பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பு! அறவே இல்லை மக்கள் ஒத்துழைப்பு
ADDED : ஆக 26, 2024 07:13 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. இவற்றை பறிமுதல் செய்வதில் அதிகாரிகளின் தொடர் நடவடிக்கை அவசியமாகிறது. அதே நேரத்தில் பொதுமக்களும் ஒத்துழைத்தால்தான் பிளாஸ்டிக்கை அறவே ஒழிக்க முடியும். ஒருமுறை பயன்படுத்தி துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கினால் ஏற்படும் தீமைகள் குறித்து அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நாடு முழுவதும் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக்கிற்கு அரசு தடை விதித்துள்ள போதிலும் இதன் பயன்பாடு குறைந்த பாடு இல்லை. 75 மைக்ரான்களுக்கு குறைவான பிளாஸ்டிக் கேரி பேக் உற்பத்தி செய்யவும், இறக்குமதி செய்யவும், இருப்பு வைக்கவும், விற்கவும், பயன்படுத்தவும் தடை உள்ளது.
ஆனால் இத்தகைய பொருட்களின் பயன்பாடு ஓட்டல்கள், மளிகை கடைகள், பேக்கரிகளில் அதிகம் உள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள் திருவிழாக்கள், கட்சி கூட்டங்களில், அன்னதானம் நடைபெறும் இடங்கள், மதுபான கடைகளில் அதிகமாக புழக்கத்தில் உள்ளன. அதிகாரிகள் நகர் , கிராமப்புற பகுதிகளில் அடிக்கடி சோதனையிட்டு ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வோர் மீது அபராதம் விதித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்களும் ஓட்டல்கள் ,மளிகை கடைகளுக்கு செல்லும் போது தவறாமல் ஒரு துணிப்பை எடுத்துச் செல்வதை மனதில் கொள்ள வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக மீண்டும் மஞ்சள் பை இயக்கத்தின் மூலம் பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்யாமல் விடுவதால் இவற்றின் பயன்பாடு கணிசமாக அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் தொடர் நடவடிக்கை எடுத்தால் தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.