/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைரோடு அருகே சிசுக்கொலையா * போலீசார் விசாரணை
/
கொடைரோடு அருகே சிசுக்கொலையா * போலீசார் விசாரணை
ADDED : ஏப் 23, 2025 03:12 AM
கொடைரோடு:திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே ஜெ.ஊத்துப்பட்டியில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தையை தாயே கொன்று புதைத்ததாக எழுந்த புகாரையடுத்து அம்மையநாயக்கனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கொடைரோடு அருகே உள்ள ஜெ.ஊத்துப்பட்டியைச் சேர்ந்தவர் மெக்கானிக் பாலமுருகன் 32. மனைவி சிவசக்தி 23. இவர்களுக்கு சிவன்யா 5, மகள் உள்ளார். சிவசக்திக்கு ஏப்., 16-ல் சின்னாளபட்டி தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமுடன் இருந்த நிலையில் ஏப்., 19 -ல் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஏப்., 20ல் பிறந்த பெண் குழந்தை மர்மமான முறையில் இறந்தது. குழந்தை உடலை வீட்டின் பின்புறம் புதைத்தனர். பிறந்த பச்சிளம் பெண் குழந்தை ஆரோக்கியமாக வீடு திரும்பிய நிலையில் ஒரே இரவில் மர்மமான முறையில் உயிரிழந்தது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த கிராம செவிலியரிடம் சிவசக்தி முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்தார். சந்தேகமடைந்த செவிலியர் அம்மையநாயக்கனூர் மருத்துவ அலுவலரிடம் தெரிவித்தார். வட்டார மருத்துவ அலுவலர் வினோத், போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா குழந்தையின் தாய் சிவசக்தி மற்றும் தந்தை பாலமுருகனிடம் விசாரணை நடத்தி சந்தேக வழக்கு பதிவு செய்தனர்.
தாசில்தார் விஜயலெட்சுமி முன்னிலையில் மருத்துவ குழுவினர் தலைமையில் இன்று (ஏப்.23) குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு, சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. பிறந்த 4 நாட்களிலேயே பச்சிளம் குழந்தை இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.