/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுகாதாரக்கேடால் நோய் தொற்று; மறியல்
/
சுகாதாரக்கேடால் நோய் தொற்று; மறியல்
ADDED : பிப் 04, 2024 04:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி : ஆத்துார் ஒன்றியம் எஸ்.பாறைப்பட்டி அருகே உள்ள மன்னம்பட்டி கிராமத்தில் 200க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தின் ஒரு பகுதி எஸ் பாறைப்பட்டி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் எஞ்சிய பகுதி வீரக்கல் ஊராட்சியின் எல்லை பகுதியாகவும் அமைந்துள்ளது. நலத்திட்ட பணிகள் நிறைவேற்றுவதில் இரு ஊராட்சிகளுக்கு இடைப்பட்ட பகுதியாக இருப்பதால் புறக்கணிப்பு தொடர்வதாக புகார் நீடிக்கிறது. இந்நிலையில் குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை பராமரிப்பில் உள்ளாட்சி அமைப்புகள் அலட்சியம் காட்டி வருகின்றன. பலர் தொற்று பாதிப்புகளால் அவதிபடுகின்றனர்.
இப்பகுதி சிறுவர்கள் தாங்களாகவே சாக்கடை பராமரிப்பு பணியில் ஈடுபட்டனர்.