/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் பரவும் தொற்று...
/
ரோடுகளில் தேங்கும் கழிவுநீரால் பரவும் தொற்று...
ADDED : நவ 25, 2024 05:29 AM

ரோட்டில் வீணாகும் குடிநீர் : வடமதுரை எரியோடு ரோட்டில் குடிநீர் குழாய் கேட் வாழ்விலிருந்து அதிகளவில் தண்ணீர் வீணாக செல்கிறது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சரி செய்ய சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
--முருகேஸ்வரி, தென்னம்பட்டி.
சேதமான தண்ணீர் தொட்டி : திண்டுக்கல் அணைப்பட்டியில் குடிநீர் தொட்டி சேதமடைந்து தண்ணீர் வீணாக செல்கிறது. மோட்டார் போடும் போது மின்சாரமும் வீணாகிறது. தண்ணீர் தொட்டியை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஐயப்பன், அணைப்பட்டி.---------
ரோட்டில் தேங்கும் கழிவுநீர் : பழநி மானுார் பள்ளிவாசல் பின்புற தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் ரோட்டில் ஓடுகிறது. இதனால் மக்கள் நடந்து செல்ல முடியவில்லை. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கால்வாய் அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முகமது ஜின்னா, மானுார்.---------
குப்பையால் உருவாகும் சீர்கேடு : நிலக்கோட்டை வத்தலக்குண்டு ரோட்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் தீவைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்படுகிறது. குப்பையை அகற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுரேஷ்குமார்,நிலக்கோட்டை.---------
விபத்தை ஏற்படுத்தும் ரோடுகள் : ஒட்டன்சத்திரம் நகராட்சி மார்க்கெட் பைபாஸ் ரோட்டில் தனியார் மருத்துவமனை அருகே ரோடு சேதமாகி உள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் ரோடு பள்ளமாக மாறியுள்ளது. மக்கள் சிரமப்படுகின்றனர். இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். -
-கண்ணுச்சாமி,ஒட்டன்சத்திரம்.---------
தொற்று பரப்பும் கழிவுநீர் : வடமதுரை போலீஸ் ஸ்டேஷன் முன் சாக்கடை வாய்க்கால் பாதை அடைபட்டுள்ளது. இதனால் கழிவுநீர் முழுவதும் ரோட்டில் பாய்வதால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கழிவுநீர் ரோட்டில் பாய்வதை தடுக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். --
-மணிகண்டன், வடமதுரை.
எரியாத மின் விளக்குகள் : திண்டுக்கல் அறிவு திருக்கோயில் அருகே ரோட்டில் மின்கம்பத்தில் உள்ள விளக்குகள் இரவு நேரங்களில் எரியவில்லை. இதனால் தினமும் பொதுமக்கள் இருட்டில் செல்கின்றனர். திருட்டு சம்பவங்கள் நடப்பதால் தெருவிளக்கை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜ்குமார், திண்டுக்கல்.----------