ADDED : பிப் 26, 2024 07:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல், பழநி ரெயில்வே ஸ்டேஷன்களில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட இருக்கிறது. பிரதமர் மோடி காணொலிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார். திண்டுக்கல் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஷரத்ஸ்ரீவஸ்தவா நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் கூறியதாதாவது, அமிர்த் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 554 ரயில்வே ஸ்டேஷன்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்த இருக்கிறது.
காத்திருப்பு அறை, ரயில் வருகை குறித்த டிஜிட்டல் பலகைகள், வாகன நிறுத்துமிடம், 1,500 நடைமேடை பாலங்கள்,சுரங்கப்பாதைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது.
நேருஜி நகரில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

