/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நன்றாக படித்தவர்கள் கூட அதிக மதிப்பெண் எடுப்பது சிரமம் பிளஸ் 2 ஆங்கில தேர்வு எழுதியவர்கள் கருத்து
/
நன்றாக படித்தவர்கள் கூட அதிக மதிப்பெண் எடுப்பது சிரமம் பிளஸ் 2 ஆங்கில தேர்வு எழுதியவர்கள் கருத்து
நன்றாக படித்தவர்கள் கூட அதிக மதிப்பெண் எடுப்பது சிரமம் பிளஸ் 2 ஆங்கில தேர்வு எழுதியவர்கள் கருத்து
நன்றாக படித்தவர்கள் கூட அதிக மதிப்பெண் எடுப்பது சிரமம் பிளஸ் 2 ஆங்கில தேர்வு எழுதியவர்கள் கருத்து
ADDED : மார் 06, 2024 01:48 AM

திண்டுக்கல்:பிளஸ் 2 தமிழ் தேர்வு வினாக்கள் எளிதாக இருந்த நிலையில் ஆங்கிலம் தேர்வு வினாக்கள் சற்று கடினமாகவே இருந்தது. நன்றாக படித்தவர்கள் கூட அதிக மதிப்பெண் எடுப்பதில் பாதிப்பை ஏற்படுத்தும் என திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்வு எழுதிய மாணவர்கள் கூறினர். அவர்கள் கூறியதாவது:
ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினம்
பூஜா ஸ்ரீ, மாணவி, அச்யுதா மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண் பகுதியில் 4 கேள்விகள் வரை யோசித்து எழுதுவது போல் இருந்தது. மரபுத்தொடர் (இடியம்) பரிச்சயம் இல்லாத ஒன்றாக இருந்தது. கிராமரில் அதிகமாக நாங்கள் எதிர்பார்த்தது இன்வெர்ஷன் தான். ஆனால், டிகிரி ஆப் கம்பேரிசன் கொடுத்திருந்தார்கள். பகுதி 3 ல் எப்போதுமே பிராசஸ் இருக்கும். ஆனால் இந்தமுறை அதுவும் இல்லை. மற்றபடி வினாத்தாள் எளிமையாகவே இருந்தது. ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு மட்டுமே யோசிக்க வேண்டியதிருந்தது.
பதட்டம் இல்லை
ஜி.யுவஸ்ரீ (சேரன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, சின்னாளபட்டி): பாட பின்பகுதி வினாக்கள், ஆசிரியர்கள் சொந்தமாக உருவாக்கிய வினாக்களை கொண்டு பயிற்சி அளித்தனர். நிச்சயமாக அதிக மதிப்பெண் கிடைக்கும். அனைத்து வினாக்களும் எளிமையாக இருந்தது. மரபுத் தொடர், மரபுவழக்கு தொடர் சார்ந்த ஒரு மதிப்பெண் வினாக்களில் சில சற்று கடினமாக அமைத்திருந்தனர். அதிக அளவில் ஸ்கோர் இருக்கும் என நினைக்கிறேன்.
ஒரு மதிப்பெண் வினா கடினம்
ஆர்.அக் ஷ யா தரணி, ஸ்ரீகிருஷ்ணா மெட்ரிக்., மேல் நிலைப்பள்ளி ஒட்டன்சத்திரம்: ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. 20 ஒரு மதிப்பெண் வினாக்களில் ஐந்து வினாக்கள் கடினமாக இருந்தன. இரண்டு மற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள், ஐந்து மதிப்பெண் வினாக்கள் எளிதில் எழுதும் படி இருந்தது. நன்றாக படித்தவர்கள் 90 சதவீதம் மதிப்பெண்களுக்கு குறையாமல் எடுக்க வாய்ப்பு உள்ளது.
மொத்த மதிப்பெண்ணில் பாதிப்பு
வி.ஹரிகிருஷ்ணன், கலைமகள் மேல்நிலைப் பள்ளி, வடமதுரை: ஆசிரியர்களே எதிர்பாராத வகையில் கேள்விகள் கடினமாக இருந்தன.
பாகம் 1ல் இருந்த 20 ஒரு மதிப்பெண் வினாக்கள், பாகம் 3ல் சுலோகன் எழுதுவது, பழமொழி போன்ற ஒரு மதிப்பெண் வினாக்களும் கடினமாக இருந்தன. பல மாணவர்கள் இறுகிய முகத்துடன் தேர்வு அறையில் இருந்து வேளியேறினர். அகமதிப்பீடு மதிப்பெண் கழித்து 90 மதிப்பெண்களுக்கு மட்டுமே தேர்வு நடந்ததால் 25 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைவதில் சிரமம் இருக்காது. ஆனால் மொத்த மதிப்பெண் பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எதிர்பார்த்தது வராதது ஏமாற்றம்
சக்தி, ஆசிரியர், அச்யுதா மெட்ரிக் பள்ளி, திண்டுக்கல்: முந்தைய ஆண்டுகள் வினாத்தாள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட வினாத்தாள்களை வைத்து கலந்துரையாடி மாணவர்களுக்கு கற்பித்திருந்தோம். ஆனால் அதில் இல்லாத ஒரு மதிப்பெண் வினாக்கள் இந்த முறை கொடுக்கப்பட்டிருந்தது. முக்கியமாக மரபுத்தொடர்கள் மாணவர்களை மிகவும் யோசிக்க வைத்திருக்க வேண்டுமென்றே சொல்ல வேண்டும்.
சாதாரண முதல் நன்றாக படிக்கும் மாணவர்கள் வரை கிராமரில் எதிர்பார்த்தது இன்வர்ஷன் அல்லது பிகின் வித் கொடுப்பார்கள் என்றுதான் நினைத்தோம். ஆனால் அது இல்லை. புத்தகம் தாண்டி பல விஷயங்களை மாணவர்கள் படித்திருந்தாலும் பரிச்சையமான கேள்விகள் வரவில்லை என்பது ஏமாற்றம் தான்.

