/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரெட்டியார்சத்திரம் கோயிலில் இத்தாலி பக்தர்
/
ரெட்டியார்சத்திரம் கோயிலில் இத்தாலி பக்தர்
ADDED : பிப் 17, 2024 05:40 AM

ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் பாதாள செம்பு முருகன் கோயிலில் இத்தாலி பக்தர் வழிபட்டார்.
இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர் யக்கப்போ 27. ரெட்டியார்சத்திரம் அருகே ராமலிங்கம்பட்டியில் உள்ள பாதாள செம்பு முருகன் கோயிலுக்கு நேற்று வந்திருந்தார். கோயில் நிர்வாகத்தினர் கூறுகையில், ' இத்தாலி பக்தர்கள் யோக கலையில் ஆர்வம் கொண்டவர்கள்.
சுவாமி தரிசனம் முடித்தபின் கோயில் நிர்வாகி அறிவானந்த சுவாமியிடம் 'நாகதேக முத்ரா' பயிற்சி பெற்றார்.
இதன் மூலம் பயம், பதட்ட உணர்வுகளை தவிர்க்க முடியும். பாரம்பரிய முறைப்படி கருங்காலி மாலையை அவர் அணிந்தபின், ஹிந்து கலாசாரம், பண்பாடு, ஆன்மிக வழிபாட்டு முறைகளில் ஈர்ப்பு உருவானதாக தெரிவித்தார்' என்றனர்.