ADDED : நவ 19, 2025 06:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் பள்ளிக்கல்வித்துறை அரசாணையை ரத்துசெய்ய வேண்டும், ஊதிய முரண்பாடு களையவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தது.
இதை தொடர்ந்து திண்டுக்கல்லில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிர்வாகிகள் முபாரக்அலி, ஜெசி, முருகன், ஜான்பீட்டர், ராஜாக்கிளி உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அனைத்துத் துறைகளிலும் பணிகள் தேக்கம் அடைந்தன.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் கணக்கீடு படிவ பதிவேற்றம் பணிகளும் பாதிக்கப்பட்டன.

