/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை கோரி போஸ்டர்கள்
/
லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை கோரி போஸ்டர்கள்
ADDED : நவ 19, 2025 06:11 AM
வடமதுரை: வடமதுரை பத்திரப் பதிவு அலுவலக லஞ்ச பிரச்னைகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளன.
இங்கு 13 ஆண்டுகளாக நிரந்தரமாக சார்பதிவாளர் இல்லாமல் வெவ்வேறு ஊர்களில் பணிபுரிவோர் மாற்று பணியாக வருகின்றனர். 7 நாட்களில் தர வேண்டிய வில்லங்க சான்று ஆண்டுகணக்கில் வழங்கப்படாமல் இடித்தடிக்கப்படும் நிலை உள்ளது.
ஊழியர்கள் அதிக தாமதமாக பணிக்கு வருவது, லஞ்சம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு உயரதிகாரிகளுக்கு மனு தந்தும் தீர்வு கிடைக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்டோர் நுாதன முறையில் போஸ்டர்கள் மூலம் சில மாதங்களாக அவ்வப்போது சிரமத்தை வெளிப் படுத்துகின்றனர்.
இந்நிலையில் வடமதுரை பகுதியில் அக்கப்போர் இயக்கம் ஒட்டிய போஸ்டரில் லஞ்ச பிரச்னைகளுக்கு பதிவுத்துறை போல் அலட்சியம் காட்டாமல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர்.

