/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறை நிரப்பும் போராட்டம்; 500 பேர் கைது
/
சிறை நிரப்பும் போராட்டம்; 500 பேர் கைது
ADDED : ஜன 22, 2025 08:53 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் செம்பட்டி, நிலக்கோட்டை, பழநி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட 9 இடங்களில் நடந்த மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டத்தில் 500 பேரை போலீசார் கைது செய்தனர்.
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். 100 நாள் வேலையை மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடந்தது.
திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் -தாராபுரம் ரோடு சந்திப்பில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் சாலை மறியல் செய்த 106 மாற்றுத்திறனாளிகளை போலீசார் கைது செய்தனர்.
* ரெட்டியார்சத்திரத்தில் ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார்.
ஒன்றிய தலைவர் கோபி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 80க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.