/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு ;58 பேர் காயம்
/
கொசவபட்டியில் ஜல்லிக்கட்டு ;58 பேர் காயம்
ADDED : பிப் 08, 2025 05:35 AM

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே கொசவபட்டி அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 780 மாடுகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில் மாடுகள் முட்டியதில் 58 பேர் காயமடைந்தனர்.
கொசவபட்டி அந்தோணியார் சர்ச் திருவிழாவை முன்னிட்டு நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திண்டுக்கல்,தேனி,மதுரை,விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 780 மாடுகள் பங்கேற்றன. மாடுபிடி வீரர்கள் 300 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆர்.டி.ஓ., சக்திவேல் தொடங்கி வைத்தார். பயிற்சி ஆட்சியர் ராஜேஸ்வரி, கிழக்கு தாசில்தார் மீனாதேவி,துணை தாசில்தார் பிரேம்குமார், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன்,வி.ஏ.ஓ.,நாகன் உடன் இருந்தனர்.
மாடுகள் முட்டியதில் 16 வீரர்கள்,மாடுகளின் உரிமையாளர்கள் 28, பார்வையாளர்கள் 14 என 58 பேர் காயமடைந்தனர். வெற்றி பெற்ற வீரர்கள்,பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.