நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நிலக்கோட்டை:வரத்து குறைவால் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.1200க்கு விற்கப்பட்டது.
நிலக்கோட்டை சுற்றிய பகுதிகளில் ரோஜா, செவ்வந்தி, செண்டு மல்லிகை பூ, முல்லை, பிச்சி, மல்லிகை பூக்கள் பயிரிடப்படுகிறது. நிலக்கோட்டை பூ மார்க்கெட் கொண்டு வரப்பட்டு விற்கப்படுகிறது. தற்போது பனி மூட்டத்தால் பூக்கள் வரத்து குறைந்து விலை உயர்ந்துள்ளது.
நேற்று கிலோ மல்லிகை 1200, முல்லை 650, பிச்சி 400, ரோஜா 100, செவ்வந்தி 100, நாட்டு சம்பங்கி 150, ஒட்டு சம்பங்கி 70, செண்டு மல்லி 70 என்ற விலைகளில் விற்பனையானது.
இன்று கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடப்பதாலும், முகூர்த்த நாளாக உள்ளதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.