/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
/
திண்டுக்கல்லில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
ADDED : டிச 06, 2024 06:22 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.,சார்பில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க.,சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்., சிலை முன்பு அமைக்கப்பட்ட ஜெ.,திரு உருவப் படத்திற்கு அமைப்பு செயலாளர் மருதராஜ் தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ் மோகன் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு,சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் ராஜசேகரன், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாரதி முருகன், மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன்,மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் ஜெயபாலன்,முன்னாள் ஆவின் தலைவர் திவான் பாட்ஷா,மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் வீரமார்பன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ராஜேஷ் கண்ணா, மாவட்ட தொழிற்சங்க செயலாளர் ஜெயராமன்,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் சின்னு, கலை பிரிவு செயலாளர் ரவிக்குமார் பங்கேற்றனர்.
கொடைக்கானல்: நகரச் செயலாளர் ஸ்ரீதர் தலைமையில் ஜெ., உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். துணைச் செயலாளர் ஜாபர் சாதிக், மாவட்ட எம்.ம்.ஜி ஆர்., மன்ற இணைச் செயலாளர் பிச்சை, நகராட்சி கவுன்சிலர்கள் , தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் பாலசுப்ரமணி, மாவட்ட பிரதிநிதி ஆவின் பாரூக் கலந்து கொண்டனர்.
ஒட்டன்சத்திரம்: பஸ் ஸ்டாண்ட் முன்பு நடந்த நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செய்யப்பட்டது. நகர செயலாளர் எஸ்.நடராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் பி. பாலசுப்பிரமணி, என்.பி. நடராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் அப்பன் கருப்புசாமி, முருகேசன், பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, ஒன்றிய துணை செயலாளர்கள் எஸ்.செல்வராஜ், சண்முகவேல், மாவட்ட மீனவர் அணி செயலாளர் கே.பி. வி. மனோகரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ராஜசுந்தர செல்வன், ஒன்றிய பொருளாளர் சண்முகம், மாவட்ட பிரதிநிதி வேலு, ஒன்றிய பேரவை செயலாளர் குப்புசாமி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் காமாட்சி ராஜா கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.ம.மு.க., சார்வில் ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் முன்பு ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
மாவட்ட செயலாளர் கேபி.நல்லசாமி தலைமை வகித்தார். நகரச் செயலாளர் கே.சுப்பிரமணி, நகர அவைத் தலைவர் செல்வம், நகர பொருளாளர் ஏ. எஸ். ஆர். ராமமூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஆர்.எஸ். ஸ்ரீ ராம், மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் எம்.விஜயகுமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.சண்முகவேல், நகர துணைச் செயலாளர் ராமசாமி, நகர வார்டு செயலாளர்கள் சங்கர், காளிமுத்து, கருப்பசாமி, ராமதாஸ் கலந்து கொண்டனர்.
சின்னாளபட்டி : ஆத்துார் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் என்.பஞ்சம்பட்டியில் ஒன்றிய செயலாளர் மயில்சாமி தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது.
மாநில பொதுக்குழு உறுப்பினர் சுகன், ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலாளர் அருளானந்தம், மகளிரணி இணைச் செயலாளர் ஆனிசோபிமிடில்டா, வக்கம்பட்டி ஊராட்சி தலைவர் பேட்ரிக் பிரேம்குமார், ஒன்றிய கவுன்சிலர் அருள் வெண்ணிலா பங்கேற்றனர்.
சித்தையன்கோட்டை: பழைய பஸ் ஸ்டாண்டில் நகர செயலாளர் முகமது அலி தலைமை வகித்தார்.கிழக்கு மாவட்ட மாணவரணி செயலாளர் கோபி, ஒன்றிய மாணவரணி செயலாளர் முகமது ஹாஜியார் முன்னிலை வகித்தனர்.
கன்னிவாடி: ரெட்டியார்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, செம்மடைப்பட்டி, மூலச்சத்திரம், நடுப்பட்டி உள்ளிட்ட இடங்களில் ஒன்றிய செயலாளர் ஆர்.கே.சுப்ரமணி தலைமையில் மவுன ஊர்வலம் நடந்தது. ஜெ படத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்தினர். அவைத்தலைவர் வெங்கடாச்சலம், ஊராட்சி தலைவர் மருதமுத்து, எம்.ஜி.ஆர்., இளைஞரணி மாவட்ட தலைவர் மகேந்திரன் பங்கேற்றனர்.
வடமதுரை : வடமதுரை ஒன்றியத்தில் பல பகுதிகளில் நடந்த நினைவு தினம் அனுசரிப்பில் மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிச்சாமி, ஐ.டி.,பிரிவு மதுரை மண்டல தலைவர் கோகுல்கவுதம், முன்னாள் ஒன்றிய தலைவர் ராஜசேகர், மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜமோகன், இணை செயலாளர் செல்லபாண்டியன், அய்யலுார் நகர இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் யுவராஜா, ஜெ.பேரவை செயலாளர் சுப்பையா, ஐ.டி.,பிரிவு செயலாளர் செந்தில்குமார், எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி முரளி பங்கேற்றனர்.