ADDED : டிச 21, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : ஜே.சி.ஐ., இன்டர்நேஷனல் திண்டுக்கல் கிங்ஸ் கிளை 2025 நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேருஜி நகர் நரிவிழி மீட்டிங் ஹாலில் நடந்தது. மண்டல தலைவர் மணிகண்டன்,மண்டல துணை தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். டாக்டர் ஜனனி ஈஸ்வரன்,மாஸ் அறக்கட்டளை தலைவர் சக்திவேல் பங்கேற்றனர்.
கிளை 2025 தலைவராக ஹேமலதா பதவி ஏற்றார். அவருக்கு கிளை முன்னாள் தலைவர் கண்ணன் பதவி பிரமாணம் செய்தார். ஆதரவற்றோர் இல்லத்துக்கு அரிசி,ஜேசீஸ் கல்வி உதவி திட்டத்துக்கு நிதி வழங்கப்பட்டது. ஜேசீஸ் மாநில முன்னாள் துணை த்தலைவர் ஹரிஹரன் பேசினார். செயலாளர் கீர்த்தனா முரளி நன்றி கூறினார். ஏற்பாடுகளை மண்டல பொறுப்பாளர் நாகராஜ பூபதி , மாவட்ட நெறியாளர் சப்தகிரி,முன்னாள் தலைவர்கள் ரங்கராஜ், முத்துப்பாண்டி,முத்து மணிகண்டன் செய்தனர்.

