/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தச்சு தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை
/
தச்சு தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை
ADDED : செப் 23, 2024 05:13 AM

வேடசந்துார், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் விஸ்வகர்மாநகரைச் சேர்ந்த தச்சு தொழிலாளி கந்தசாமி 57. இவரது மனைவி மாரியம்மாள். மகன் விக்னேஷ் பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
விக்னேஷூக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. புதுமண தம்பதிகளை பெங்களூருவில் குடியேற்றுவதற்காக கந்தசாமி சில நாட்களுக்கு முன் குடும்பத்தினருடன் பெங்களூரு சென்றார்.
இதை பயன்படுத்தி நேற்று முன்தினம் இரவு கந்தசாமி வீட்டின் கதவுகளை உடைத்து மூன்று பீரோவிலிருந்த நகைகள், பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து தப்பினர்.
எவ்வளவு நகைகள், பணம் என்பது குறித்து கந்தசாமி புகார் அளித்த பிறகு தான் தெரிய வரும் என கூறிய வேடசந்துார் போலீசார், கொள்ளையில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.