/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நத்தம் அருகே நகை கொள்ளையன் கைது
/
நத்தம் அருகே நகை கொள்ளையன் கைது
ADDED : நவ 26, 2024 05:49 AM

நத்தம்: நத்தம் பகுதியில் வீடுகளின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
நத்தம் அருகே சிறுகுடி-மேற்குத்தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் 30. ஏப்ரல் 24-ம் தேதி மதியம் குடும்பத்துடன் தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள சென்றார். மாலையில் வந்து பார்த்த போது இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஒன்பதரை பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது. நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி குற்றவாளிகளை தேடி வந்தார். இந்நிலையில் சிறுகுடி பகுதியில் பிரகாஷ் வீட்டின் அருகில் இருந்த மேலமேட்டுபட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமியை 33, சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ஒன்பதரை பவுன் நகையை பறிமுதல் செய்தனர்.
,