ADDED : ஏப் 10, 2025 06:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் மீனாட்சிபுரம் காளியம்மன் கோயில் திருவிழா மார்ச் 30-ல் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் அழைத்து வர காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று இரவு அம்மன்குளத்தில் இருந்து ஊர்வலமாக கரகம் கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தோரணமரம் ஊன்றும் நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
நேற்று முன்தினம் இரவு கரகம் அம்மன்குளத்திற்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து அம்மன் மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவுபெற்றது.