/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கற்கள் பெயர்ந்த கரிக்காலி ரோடால் தினம் தினம் சிரமம்
/
கற்கள் பெயர்ந்த கரிக்காலி ரோடால் தினம் தினம் சிரமம்
கற்கள் பெயர்ந்த கரிக்காலி ரோடால் தினம் தினம் சிரமம்
கற்கள் பெயர்ந்த கரிக்காலி ரோடால் தினம் தினம் சிரமம்
ADDED : செப் 26, 2024 05:38 AM

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் இருந்து எஸ்.புதுார் வழியாக கரிக்காலி செல்லும் தார் ரோடு சேதமடைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் தினம் தினம் அவதிப்படுகின்றனர்.
குஜிலியம்பாறையில் இருந்து எஸ்.புதுார் வழியாக கரிக்காலி செல்லும் தார் ரோடு 7 கி.மீ., துாரம் உடையது. இந்த ரோடு 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட நிலையில் தற்போது கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்றுள்ளது. இந்த வழியாகத்தான் எஸ்.புதுார், சேவகவுண்டன்புதுார். கோமுட்டிபட்டி, சி.சி.குவாரி, கரிக்காலி சுற்றுப்பகுதியினர் சென்று வருகின்றனர். இந்த ரோட்டில் டூவீலர்களில் செல்வதே சிரமமாக உள்ள நிலையில் பள்ளி கல்லுாரி வாகனங்கள் மட்டுமின்றி நுாற்பாலை வாகனங்களும் சென்று வருகின்றன. விவசாயிகளும் டூவீலர்களில் காய்கறிகளை வார சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். இவ்வளவு முக்கியத்துவம் பெற்ற இந்த ரோடு கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்றுள்ளதால் இந்த ரோட்டை புதுப்பித்து தர வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
ஆக்கிரமிப்பால் விபத்து
என்.தங்கவேல், டீ கடை உரிமையாளர், குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் இருந்து மருத்துவமனை முன்னால் திரும்பும் கரிக்காலி ரோட்டில் கூடுதலான ஆக்கிரமிப்புகள் உள்ளது. இந்த இடத்தில் அடிக்கடி விபத்து நடப்பதால் ரோட்டோர ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீராக்க வேண்டும். ரோடு திரும்பும் இடத்தில் எதிரில் வரும் வண்டியே தெரியவில்லை. அதேபோல் ரோட்டோரம் பயன்பாடற்ற பழைய பொருட்கள் குவியலாக குவிந்துள்ள நிலையில் தீ விபத்து உள்ளிட்ட அசம்பாவிதம் நடந்தால் கடைவீதியில் பெரும் சேதம் ஏற்படும். அருகில் வங்கிகள் வேறு உள்ளன. இதை நெடுஞ்சாலைத்துறை , காவல்துறை நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
நடப்பதற்கே சிரமம்
கே.தங்கராஜ், ஓய்வு போலீஸ், கோமுட்டிபட்டி: குஜிலியம்பாறையில் இருந்து பேரூராட்சி அலுவலகம் வழியாக எஸ்.புதுார் செல்லும் ரோடும் சேதமடைந்துள்ளது.இந்த ரோட்டின் வழியாகத்தான் தினமும் வந்து செல்ல வேண்டி உள்ளது. கற்கள் பெயர்ந்து நடப்பதற்கே பயனற்றுள்ள இந்த ரோட்டை மாவட்ட நிர்வாகம் புதுப்பித்து தரவேண்டும்.
மழை வந்தால் மேலும் சேதம்
சி. மணி, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர், குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் இருந்து சி.சி., குவாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் கூடுதலான மக்கள் இந்த வழியாகத்தான் சென்று வருகின்றனர். டூவீலர்களில் செல்லவே பயனற்றுள்ள இந்த ரோட்டை மாவட்ட நிர்வாகம் விரைந்து புதுப்பிக்க வேண்டும். மழைக்காலம் துவங்கி விட்டால் ரோடு மேலும் சேதமடைந்து விடும். இதன் மீது மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும்.