/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்காரரிடம் ரூ.39 லட்சம் மோசடி: கர்நாடக மாணவர்கள் கைது
/
திண்டுக்கல்காரரிடம் ரூ.39 லட்சம் மோசடி: கர்நாடக மாணவர்கள் கைது
திண்டுக்கல்காரரிடம் ரூ.39 லட்சம் மோசடி: கர்நாடக மாணவர்கள் கைது
திண்டுக்கல்காரரிடம் ரூ.39 லட்சம் மோசடி: கர்நாடக மாணவர்கள் கைது
ADDED : டிச 02, 2024 08:29 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாவட்டம் பிள்ளையார் நத்தத்தை சேர்ந்த தனியார் ஊழியரிடம் ஆன்லைன் டிரேடிங் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம்
எனக்கூறி ரூ.39 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கர்நாடகா கல்லுாரி மாணவர்களை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிள்ளையார் நத்தத்தை சேர்ந்தவர் சரவணக்குமார்35. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இந்த ஆண்டு பிப்ரவரியில் இவரது முகநுால் பக்கத்தில் ஆன்லைன் டிரேடிங் மூலம் குறைந்த பணத்தை முதலீடு செய்து அதிக பணத்தை சம்பாதிக்கலாம் என
கவர்ச்சிகரமான விரம்பரத்தை பார்த்து அதில் உள்ள அலைபேசி எண்ணை தொடர்பு கொண்டார். எதிர் திசையில் பேசிய மர்ம நபர் பிறமொழி கலந்த தமிழில் பேசி சரவணக்குமாரிடம் பழகி அவருக்கு ஆன்லைன் டிரேடிங் குறித்த விபரங்களை தெரிவித்தார், இதை
நம்பிய சரவணக்குமார்,மர்ம நபர் கூறிய வங்கி கணக்கு எண்ணில் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.39 லட்சத்தை ஆன்லைன் மூலமாக அனுப்பினார்.
பணத்தை பெற்று கொண்ட மர்ம நபர் சில நாட்களில் தன்னுடைய அலைபேசி எண்ணை சுவிட்ச் ஆப் செய்துதலைமறைவானார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சரவணக்குமார் திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில்புகாரளிக்க இன்ஸ்பெக்டர் விக்டோரியா,எஸ்.ஐ.,லாய்டுசிங் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து சரவணக்குமார்,பணத்தைஅனுப்பிய வங்கி கணக்கு எண் எந்த ஊரில் உள்ளது,அது யாருடையது என ஆய்வு செய்தனர். அப்போது கர்நாடகாவை சேர்ந்த கல்லுாரி
மாணவர்கள் ஆயுஷ்20,ஹர்ஷா20,என்பவர்களுடையது என தெரிந்தது.
திண்டுக்கல் போலீசார் கர்நாடகாவிற்கு சென்று அந்த 2வாலிபர்களையும் கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்து விசாரணையை துவக்கினர். போலீசார் கூறியதாவது: சரவணக்குமார் பணம்அனுப்பிய வங்கி கணக்கு கர்நாடகாவை சேர்ந்த கல்லுாரி மாணவர்கள் ஆயுஷ்,ஹர்சா,என்பவர்களுடையது. ரூ.5 லட்சம் இவர்களின்
வங்கி கணக்கிற்கு வந்துள்ளது.
இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்களது நண்பரான கர்நாடகாவை சேர்ந்த ஒருவர் கிரிக்கெட்விளையாடும் போது தங்களுடைய வங்கி எண்களை பெற்று கொண்டு அவருக்கு தெரிந்த ஒருவரிடம் கொடுத்துள்ளார். அவர் தான் இந்த காரியத்தை செய்ததாக கூறினர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் குறித்து திவிர விசாரணை நடத்துகிறோம். முதல்கட்டமாக இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர்.