ADDED : பிப் 17, 2024 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி மலைக்கோயிலில் மாசி மாத கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை , திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் சின்ன ஊகுமாரசுவாமி புறப்பாடு , தங்கரத புறப்பாடு நடைபெற்றது.
கார்த்திகை நட்சத்திர நாளில் அதிகளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருஆவினன்குடி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, நடந்தது. உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.