/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' சந்திப்பு ரோடு: பொறியாளர் ஆய்வு
/
'கொடை' சந்திப்பு ரோடு: பொறியாளர் ஆய்வு
ADDED : ஆக 06, 2025 08:58 AM

கொடைக்கானல் : கொடைக்கானலில் ரோடு சந்திப்பு அகலப்படுத்துதல் குறித்து நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் தங்கராஜன் ஆய்வு செய்தார்.
சுற்றுலாதலமான கொடைக்கானலில் சீசன், வார இறுதி நாட்களில் தொடரும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் நோக்கில் வில்பட்டி வழியாக மாற்று ரோடு குறித்த ஆய்வு நடந்து வருகிறது.
நகரில் போக்குவரத்து நெரிசல் உண்டாகும் சந்திப்பு பகுதியை விரிவாக்கம் செய்யும் திட்டமும் நெடுஞ்சாலைத் துறை முன்னெடுத்துள்ளது. நேற்று கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளி சந்திப்பு பகுதியை விரிவாக்கம் செய்ய கண்காணிப்பு பொறியாளர் தங்கராஜன் தலைமையில் ஆய்வு நடந்தது. கோட்டப் பொறியாளர்கள் சங்கர், வரலட்சுமி, உதவி கோட்டப் பொறியாளர்கள் செந்தில்குமரன், நிஷாந்தினி, உதவி பொறியாளர்கள் சரவணன், ஐஸ்வர்யா உடனிருந்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளி சந்திப்பு பகுதியில் ரூ.4.85 கோடியில் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இப்பணிக்கு சந்திப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் 15 தினங்களில் அகற்ற நோட்டீஸ் விடுக்கப்பட்டுள்ளது. விரிவாக்க பணிகள் ஒரு மாத காலத்தில் தொடங்கும் என்றனர்.