ADDED : பிப் 16, 2024 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பள்ளி மாணவர்களுக்கான பாரதியர் தின, குடியரசு தின விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் சென்னையில் நடைபெற்ற மாநில நீச்சல் போட்டியில் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி மாணவி கார்த்திகா, 50, 100, 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் 2ம் இடம் பிடித்தார்.இதே போல் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய நீச்சல் போட்டியில் 200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்ற கார்த்திகா இந்திய அளவில் 12வது இடம் பிடித்தார்.
நீச்சல் போட்டியில் தொடர்ந்து சாதித்து வரும் மாணவியான கார்த்திகாவை முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன் பாராட்டினார். உதவியாளர் கதிரேசன், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சாந்தி, உடற்கல்வி ஆசிரியை கவிதா உடனிருந்தனர்.