ADDED : ஜன 25, 2024 05:38 AM

சாணார்பட்டி: திண்டுக்கல் மஞ்சநாயக்கன்பட்டி மகாமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்தது.
இதையொட்டி பக்தர்கள் கொண்டு வந்த புனித நீர் அடங்கிய கும்பத்தை சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து மகாகணபதி, விக்னேஷ்வர, வாஸ்து சாந்தி பூஜை உட்பட மூன்று கால யாக வேள்வி பூஜைகள் செய்தனர். இதன்பின் மேளதாளம் முழங்க கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்ற கும்பாபிஷேகம்நடந்தது. சிவாச்சாரியார் சதாசிவம் குருக்கள் தலைமையில் நடத்தப்பட்டது.
பக்தர்கள் மகாமாரியம்மன் போற்றி, ஓம் சக்தி போற்றி, பராசக்தி போற்றி என கோஷங்களை எழுப்ய கருடன் வானத்தில் வட்டமிட்டது. பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக தீச்சட்டி , முளைப்பாரி எடுத்து வழிபட்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது. நத்தம் ஒன்றிய தலைவர் ஆர்.வி.என்.கண்ணன், கவுன்சிலர் விஜயன் பங்கேற்றனர்.
சின்னாளபட்டி :செட்டியபட்டி அருகே கல்லுப்பட்டி முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. காப்பு கட்டுதலுடன் துவங்கிய இதில் கணபதி ஹோமம், மூலிகை வேள்வியுடன் யாகசாலை பூஜைகள் நடந்தது. கடம் புறப்பாட்டை தொடர்ந்து கும்பங்களில் புனித நீர் ஊற்ற மூலவருக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. ஆன்மிக சொற்பொழிவு, அன்னதானம் நடந்தது.