/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம்
/
விநாயகர் கோயில்களில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூலை 15, 2025 04:00 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டுறவு நகர் செல்வ விநாயகர் கோயிலில் உள்ள செல்வ விநாயகர், பரிவார தெய்வங்களான தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்கை, அஷ்நாகநாத கிருஷ்ணன், அரசுவேம்பு விநாயகர், விசாலாட்சி சமேத காசி விஷ்வநாதர், பாலமுருகன், லிங்கோத்பவர், செல்வவாராகி அம்மன், பஞ்சமுக ஆஞ்நேயர், நவகிரகம், காலபைரவருக்கு மஹா கும்பாேஷகம் நேற்று நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் (ஜூலை 13) கணபதி ேஹாமம், வருண வழிபாடு, பூர்ணாகுதி தீபாராதனையுடன் யாகசாலை பூஜை தொடங்கியது.
நேற்று காலை விநாயகர் வழிபாடு, கன்னிகா, சுவாசினி, கோ, பைரவர் பூஜைகள், யாத்ரா தானம் நடைபெற்றது.
தொடர்ந்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பாடு நடக்க கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திண்டுக்கல், புறநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
அன்னதானம் வழங்கப்பட்டது.
பழநி: பழநி காந்தி ரோடு பெரிய கடை வீதி பட்டத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்பட்டு வரும் காந்தி ரோடு பெரிய கடை வீதி பட்டத்து விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் ஜூலை 12 ல் கணபதி பூஜையுடன் துவங்கின.
அன்று மாலை 5:00 மணிக்கு முதற்கால யாக பூஜை துவங்கியது. ஜூலை 13 ல் இரண்டாம் கால யாக பூஜைகள், கணபதி ஹோமம், கனி,கிழங்கு மூலிகைகளுடன் நடைபெற்றது.
அன்று மதியம் மூன்றாம் கால யாக பூஜை நடைபெற்றது. நேற்று அதிகாலை நான்காம் காலயாக பூஜைகள் நடக்க சுற்று சன்னதிகள், பட்டத்து விநாயகர் கோயில் மூலவர் சன்னதிக்கு செல்வ சுப்பிரமணிய குருக்கள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சாணார்பட்டி: சாமிநாதபுரம் மதுரைவீரன்சுவாமி, செல்வ விநாயகர், காளியம்மன், செல்லாண்டியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நேற்று முன்தினம் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த குடங்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கோயில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது.
கலச பூஜை, கோமாதா பூஜை உள்ளிட்ட பல்வேறு யாக பூஜைகள் நடந்தது.
நேற்று கடம் புறப்பாட்டை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கோயில் கலசங்களில் புனித நீர் ஊற்ற கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.
தி.மு.க., மாவட்ட பொருளாளர் க.விஜயன், ஒன்றிய செயலாளர் சேக் சிக்கந்தர் பாட்சா கலந்து கொண்டனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
எரியோடு: எரியோட்டில் பஸ்ஸ்டாண்ட் அருகில் இருக்கும் பத்திரகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.
இதையொட்டி நேற்று முன்தினம் காலை கணபதி பூஜையுடன் துவங்கிய விழாவில் 2 கால யாக வேள்வி பூஜைகள் நிறைவடைந்ததும், நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் பட்டர்கள் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது.
எ.குரும்பபட்டி சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் அர்ச்சகர் சவுந்தர்ராஜன் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.