/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் கோயில்களில் கும்பாபி ேஷகம்
/
திண்டுக்கல் கோயில்களில் கும்பாபி ேஷகம்
ADDED : செப் 15, 2025 04:22 AM

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள கோயில்களில் கும்பாபிேஷகம் நடந்தது.
அடியனுாத்து, நல்லாம்பட்டியில் குஞ்சாயி அம்மன், கண்ணடச்சி அம்மன், மாசி மலையாள கருப்பண சுவாமி கோயில் கும்பாபிே ஷக விழா நேற்று நடந்தது.
காலை 6:00 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் இரண்டாம் கால வேள்வி, யாக சாலை, கோ பூஜை, நவகிரக ஹோமம், மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு பிரசன்ன வெங்கடேஷ் தலைமையில் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிே ஷகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அன்னதானமும், மாலை 3:00 மணிக்கு முளைப்பாரி ஊர்வலமும் நடந்தது. இரவு 8:00 மணிக்கு தெம்மாங்கு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடை பெற்றது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாகஸ்தர்கள், பூசாரிகள், திருப்பணிக்குழு தாயனுார் பங்காளிகள், நல்லாம்பட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.
திண்டுக்கல் குமரன் திருநகர் செல்வ விநாயகர், காளியம்மன், பகவதியம்மன் கோயில் கும்பாபிே ஷகம் நடந்தது. காலை 6:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, மஹா பூர்ணாஹூதி, தீபாராதனை நடத்தப் பட்டது.
காலை 9:15 மணிக்கு வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம், இரவு 7:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
ஏற்பாடுகளை ஊர் பெரியோர்கள், முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.
பள்ளப்பட்டி ஊராட்சி கொட்டப்பட்டியில் சவுபாக்கிய விநாயகர், பட்டாளம்மன், மதுரை வீரன் சுவாமி கோயில் கும்பாபிே ஷகம் நடந்தது. காலை 6:30 மணிக்கு ருத்ர ஜெபம், வேத பாராயணம், காலை 8:00 மணிக்கு கோ பூஜை, சுமங்கலி பூஜை நடைபெற்றது.
காலை 9:00 மணிக்கு தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோயில் குருக்கள் ஜவஹர் தலைமையில் கோயில் கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிே ஷகம் செய்யப்பட்டது. விழாவையொட்டி அன்னதானமும், இரவு 8:00மணிக்குவள்ளி திருமணம் நாடகமும் நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.