/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கூலித்தொழிலாளி கொலை: சிறுவன் உட்பட நால்வர் கைது
/
கூலித்தொழிலாளி கொலை: சிறுவன் உட்பட நால்வர் கைது
ADDED : பிப் 05, 2024 12:47 AM
திண்டுக்கல் : திண்டுக்கல்லில் கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 17 வயது சிறுவன் உட்பட நால்வரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜகோபால். இவருக்கும் மேற்கு மரியநாதபுரத்தை சேர்ந்த சரவணன்38,என்பவரின் உறவினர் பெண்ணுக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. சரவணன்,நேற்று முன்தினம் ராஜகோபாலிடம் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக பொன்மாந்துறை நல்லேந்திரபுரம் அருகே அழைத்து சென்றார். அப்போது ராஜகோபால்,சரவணன்,அவரது நண்பர்களான பொன்மாந்துறையை சேர்ந்த அன்பழகன்,ஜெயகிருஷ்ண கண்ணன்,17 வயது சிறுவன் உள்ளிட்டோருடன் சேர்ந்து மது அருந்தினார். ஆத்திரமடைந்த சரவணன் தன் நண்பர்களோடு சேர்ந்து ராஜகோபாலை கீழே தள்ளி அருகிலிருந்து கல்லை எடுத்து தலையில் போட்டு கொலை செய்தார். தாலுகா போலீசார் நேற்று சரவணன், அன்பழகன்,ஜெயகிருஷ்ண கண்ணன்,17 வயது சிறுவன் உள்ளிட்ட நால்வரையும் கைது செய்தனர்.

