/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் படிமுறை நிலங்களில் சரிந்த வரப்பு
/
கொடைக்கானலில் படிமுறை நிலங்களில் சரிந்த வரப்பு
ADDED : டிச 17, 2024 04:27 AM

கொடைக்கானல்: -கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் படிமுறை நிலங்களில் வரப்புகளில் மண்சரிவு ஏற்பட்டு விவசாயிகள் பாதித்துள்ளனர்.
கொடைக்கானல் மேல்மலை பகுதியான மன்னவனுார், பூண்டி, வில்பட்டி, கிளாவரை,பூம்பாறையில் ஏராளமான ஏக்கரில் பூண்டு, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பீட்ரூட் முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்குள்ள நிலங்களின் அமைப்பு படிமுறையில் உள்ளது. இம்மலைப்பகுதியில் 4 தினங்களில் 16 செ.மீ., மழை பதிவானது.
இதையடுத்து படிமுறை நிலங்களில் சாகுபடி செய்யப்பட்ட பூண்டு, உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் வரப்புகள் சரிந்து மண்ணில் புதைந்தன. வரப்புகள் சரிந்ததால் இவற்றை சீர் செய்ய முடியாது நிலையில் விவசாயிகள் உள்ளனர்.
கனமழையால் கீழானவயல் புல பிடித்தான்கானல் குளம் உடைந்து ஏராளமான ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட விவசாய பயிர்களும் சேதமடைந்தன.
வனப்பகுதியில் உள்ள விவசாய பாசன நீர்வழி தடங்களும் சேதமடைந்தன.
மேல் மலை பகுதியில் சேதமடைந்துள்ள விவசாய பயிர்கள், சரிந்த வரப்புகள்,நீர்வழித்தடங்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.