நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சார்பில் தெற்கு ரத வீதியில் உள்ள பஜனை மட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையில் தலைவர்கள் தினவிழா நடந்தது. துணைத் தலைவர் மாரியப்பன் முன்னிலை வகித்தார். செயலாளர் தண்டபாணி வரவேற்றார்.
ஆலோசகர் டால்டன் பேசினார். நிர்வாகிகள் சத்தியன், கண்டிராஜன், முத்துகுமார், வடிவேல்முருகன் பங்கேற்றனர்.
புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தி உலக தலைவர் ஆபிரஹாம் லிங்கன், கவிக்குயில் சரோஜினி பிறந்ததின மலரஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட பொருளாளர் வெங்கிடு ஏற்பாடு செய்தார். துணை பொருளாளர் கவுதம் நன்றிகூறினார்.