/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
லெக்சர் வேல்டு பள்ளி ஆண்டு விழா
/
லெக்சர் வேல்டு பள்ளி ஆண்டு விழா
ADDED : மார் 19, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் - மதுரை ரோட்டிலுள்ள லெக்சர் வேல்டு பள்ளி ஆண்டு விழா குளோபல் ரிதம்' நிகழ்ச்சி தாளாளர் சுவாமிநாதன் தலைமையில் நடந்தது.
மதுரை எம்.எஸ்.எஸ். கல்லுாரி தாளாளர் ஜமால் முகைதீன் முன்னிலை வகித்தார். அறங்காவலர் சந்தோஷ் வரவேற்றார். பள்ளி முதல்வர் ஹெலன்ஆண்டறிக்கை வாசித்தார்.
உலக நாடுகளின் கலாசார, பண்பாட்டை விளக்கும் நடனம், நாட்டியம், நாடகம் உட்பட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
சாதனை மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிர்வாக அறங்காவலர் மனோகர் நன்றி கூறினார்.

