/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழை, பனியால் விலை குறைந்த எலுமிச்சை
/
மழை, பனியால் விலை குறைந்த எலுமிச்சை
ADDED : நவ 13, 2025 02:08 AM
ஒட்டன்சத்திரம்: மழை, பனி காரணமாக எலுமிச்சை விலை சரிவடைந்து கிலோ ரூ. 40 முதல் 60க்கு விற்பனை ஆனதால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
ஒட்டன்சத்திரம் மலைப்பகுதி கிராமங்களான வடகாடு, கண்ணனுார், கோமாளிபட்டி கிராமங்களில் எலுமிச்சை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு சுட்டெரித்த வெயில் காரணமாக எலுமிச்சை நுகர்வு அதிகரித்து கிலோ ரூ.90 வரை விற்பனையானது.
தற்போது மழை, பனி காரணமாக வெப்பநிலை குறைந்து எலுமிச்சை நுகர்வு குறைந்ததால் விற்பனை குறைந்தது. இதன் காரணமாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் எலுமிச்சை விலை சரிவடைந்து கிலோ ரூ.40 முதல் 60 க்கு விற்பனையானது. எலுமிச்சை விலை குறைந்து வருவதால் விவசாயிகள் விரக்தியடைந்து உள்ளனர்.

