sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பொதுத்தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

/

 பொதுத்தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

 பொதுத்தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

 பொதுத்தேர்வு நேரத்தை குறைக்க வேண்டும் தேசிய ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்


ADDED : நவ 14, 2025 01:36 AM

Google News

ADDED : நவ 14, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்:''பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான நேரம் 3 மணி நேரத்திற்கும் மேல் உள்ளதால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர். அவர்கள் நலன் கருதி நேரத்தை குறைக்க வேண்டும்,'' என, தமிழக அரசுக்கு தேசிய ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல்லில் சங்க மாநில துணைத்தலைவர் விஜய் கூறியதாவது: தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வில் 3 மணி நேரம் எழுதுவதற்கும், 10 நிமிடங்கள் வாசிப்பிற்கும், 5 நிமிடங்கள் பூர்த்தி செய்வதற்கும் என 3:15 மணி நேரம் கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்படுகின்றன.

மொழிப்பாடத்தேர்வுகள் 90 மதிப்பெண்களுக்கும், செய்முறை விளக்கம் உள்ள பாடங்களான விலங்கியல், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட பாடங்கள் 70 மதிப்பெண்களுக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு 3:15 மணி நேரம் என்பது அதிகமாக உள்ளது. நீண்ட நேரம் அறையில் காத்திருப்பில் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

வரும் காலங்களில் 2:30 மணி நேரம் தேர்வு எழுதுவதற்கும், 10 நிமிடங்கள் வாசிப்பிற்கும், 5 நிமிடங்கள் பூர்த்தி செய்ய என 2:45 மணி நேரம் என மாற்றினால் இதுபோன்ற சிரமங்கள் தவிர்க்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us