ADDED : டிச 21, 2024 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: எமக்கலாபுரத்தில் திண்டுக்கல் மாவட்ட சுகாதார அலுவலர் செல்வக்குமார் , மாவட்ட தொழுநோய் அலுவலர் ரூபன்ராஜ் உத்தரவின் பேரில் வீடு தோறும் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு , பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கொசவபட்டி வட்டார மருத்துவ அலுவலர் அசோக்குமார் தலைமை வகித்தார். எமக்கலாபுரம் ஊராட்சி தலைவர் சுரேஷ், மாவட்ட நலக்கல்வியாளர் முகமது இஸ்மாயில், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ஜோதிபாசு முன்னிலை வகித்தனர்.
ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் முனியப்பன், ராமச்சந்திரன், ரியாஸ், ஊராட்சி செயலர் சோபனா செய்திருந்தனர்.

