/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பெயருக்கு இலவசம் உருட்ட விட்டுட்டாங்க
/
பெயருக்கு இலவசம் உருட்ட விட்டுட்டாங்க
ADDED : ஜன 07, 2024 07:03 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச சைக்கிள்களில் உதிரி பாகங்கள் முறையாக பொருத்தாமல் வழங்கப்பட்டதால் பல கிலோ மீட்டர் துாரத்திற்கு சைக்கிள்களை உருட்டி மெக்கானிக் கடைகளை தேடி அலைந்தனர்.
மாவட்டத்தில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அரசு தரப்பில் இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகிறது. இதற்கான உதிரி பாகங்கள் சில மாதங்களுக்கு முன்பே திண்டுக்கல் வந்தது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் உதிரி பாகங்களை ஒன்றாக இணைத்து சைக்கிள்கள் தயாரிக்கப்பட்டது. 17,630 சைக்கிள்கள் தயாரிக்கப்பட்ட நிலையில் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்பட்டது.
இவைகள் தற்போது மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த சைக்கிள்களில் டயர், பிரேக், பூட்டு, பெடல்,பெல்,ரிம் உள்ளிட்ட எந்த உதிரி பாகங்களையும் முறையாக ஒன்றிணைக்காததால் மாணவர்கள் சைக்கிள்களில் ஏறி பயணிக்க முடியாது வீடுகளுக்கு பல கிலோ மீட்டர் துாரம் உருட்டி சென்றனர். மாணவிகள் பெற்றோர்களை வரவழைத்து ஆட்டோக்களில் ஏற்றி சென்றனர்.
ஒருசிலர் அருகிலிருக்கும் சைக்கிள் மெக்கானிக் கடைகளை தேடி அலைந்தனர். இதன்மீது கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சர்வீஸ் சென்டர்கள் உள்ளது
நாசருதீன்,மாவட்ட கல்வி அலுவலர்,திண்டுக்கல்: மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் சைக்கிள்களில் பிரச்னை இருந்தால் பள்ளி கல்வித்துறை சார்பில் சர்வீஸ் சென்டரில் சரி செய்யலாம்.
பள்ளிகளிலே சைக்கிள் வாங்கும் போதே கோளாறுகள் இருந்தால் அதை சரி செய்ய அங்கேயே ஊழியர்கள் உள்ளனர்.
தரமான சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.