sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புத்தாண்டில் குப்பை இல்லா நகர்களை உருவாக்க சபதம் ஏற்போமே

/

புத்தாண்டில் குப்பை இல்லா நகர்களை உருவாக்க சபதம் ஏற்போமே

புத்தாண்டில் குப்பை இல்லா நகர்களை உருவாக்க சபதம் ஏற்போமே

புத்தாண்டில் குப்பை இல்லா நகர்களை உருவாக்க சபதம் ஏற்போமே


ADDED : ஜன 01, 2025 06:32 AM

Google News

ADDED : ஜன 01, 2025 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குடிநீர் குழாயில் உடைப்பு : ஒட்டன்சத்திரம் திண்டுக்கல் ரோடு டெம்போ ஸ்டாண்ட் அருகே ரோட்டின் கீழ் செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி ரோட்டில் செல்கிறது. இதனை சரி செய்ய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ---பெரியசாமி, ஒட்டன்சத்திரம்.

...................---------

மின்கம்பத்தால் விபத்து : கொம்பேறி பட்டியில் ஊராட்சி அலுவலகம் அருகில் இருக்கும் மின் கம்பம் சேதமடைந்து கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. விபரீதம் ஏற்படும் முன் இதனை சீரமைக்க மின்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். -

-பரமன், அய்யலுார்.

.............

---------குப்பை குவிப்பால் தொற்று : பழநி பஸ் ஸ்டாண்டில் குப்பையை கொட்டி அகற்றாமல் குவிந்துள்ளனர். இதனால் சுகாதாரக் கேடுடன் நோய் தொற்று அபாயமும் ஏற்படுகிறது. இதை உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரகுராமன், பாலசமுத்திரம்.

..........---------

ரோடு சேதத்தால் விபத்து : திண்டுக்கல் அறிவு திருக்கோயில் ரோடு சேதமடைந்துள்ளதால் அதிக வாகனங்கள் சென்று வருவதால் இரவு நேரங்களில் விபத்தும் நடக்கிறது. பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தண்ணீர் வேறு தேங்கி உள்ளது. ரோட்டை சீரமைக்க வேண்டும்.

-சவுந்தர், ரோஜா நகர்.

..............---------

ரோட்டில் கழிவுநீர் தேக்கம் : திண்டுக்கல் -தாடிக்கொம்பு ரோட்டில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது .தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதோடு பாதாசாரிகள் நடந்து செல்லவும் சிரமப்படுகின்றனர் .கழிவுநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், திண்டுக்கல்.

........----------

குப்பையை அகற்றலாமே : திண்டுக்கல் கிழக்கு மீனாட்சி நாயக்கன்பட்டியில் குப்பை அகற்றாமல் உள்ளதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. தொட்டி சேதம் குறித்து பல முறை புகார் அளித்தும் கண்டு கொள்ளவில்லை. குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

-மகாலட்சுமி, திண்டுக்கல்.

..........----------

நாய்களால் அச்சம் : திண்டுக்கல் பழநி ரோட்டில் சுற்றி திரியும் நாய்களால் பொதுமக்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். ஆங்காங்கே நாய்கள் வேறு உள்ளதால் மக்கள் அச்சப்படுகின்றனர். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். -சந்திரசேகர், திண்டுக்கல்.

...............----------






      Dinamalar
      Follow us