/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு ஆயுள்
/
சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு ஆயுள்
ADDED : நவ 13, 2024 07:27 PM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் விருப்பாட்சியில் 14 வயது பள்ளி சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கும், அவரது தாய்க்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குஜிலியம்பாறை லம்பக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜா. மனைவி தேவிகா. இவர்களது மகன்கள் அஜித்(24), மஜித்(19). 2021 ல் ஒட்டன்சத்திரம் விருப்பாட்சி அருகே உள்ள சாலையோரங்களில் தங்கி வேலை செய்து வந்தனர். மஜித்,விருப்பாட்சி பகுதியில் உள்ள பள்ளியில் படித்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. மஜித் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றார். அப்போது அந்த சிறுமியையும் மஜித்,தன் குடும்பத்தோடு வெளியூருக்கு அழைத்து சென்றார். சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் புகாரளிக்க போலீசாரும் வழக்கு பதிந்து தேடினர்.
மஜித்திற்கு 2021ல் சிறுவயதாக இருப்பதால் அவரது அண்ணன் அஜித்,சிறுமியை திருமணம் செய்தார். அதனைத்தொடர்ந்து சிறுமி குடும்பத்தோடு நாமக்கல் மாவட்டத்தில் இருப்பது போலீசாருக்கு தெரிந்தது. அங்கு சென்ற போலீசார் போக்சோ சட்டத்தில் தேவிகா,அஜித்,மஜித் ஆகியோரை கைது செய்தனர். சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதன்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. குற்றவாளிகள் அஜித்திற்கு ஆயுள் தண்டனை ரூ.1.55 லட்சம் அபராதம்,தாய் தேவிகாவிற்கு ஆயுள் தண்டனை,ரூ.1.50 லட்சம் அபராதம்,மஜித்திற்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வேல்முருகன், தீர்ப்பளித்தார். அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார்