/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சுகாதார வளாகத்துக்கு பூட்டு; அச்சுறுத்தும் அங்கன்வாடி; பழநி நகராட்சி 1 வது வார்டில் அலங்கோலம்
/
சுகாதார வளாகத்துக்கு பூட்டு; அச்சுறுத்தும் அங்கன்வாடி; பழநி நகராட்சி 1 வது வார்டில் அலங்கோலம்
சுகாதார வளாகத்துக்கு பூட்டு; அச்சுறுத்தும் அங்கன்வாடி; பழநி நகராட்சி 1 வது வார்டில் அலங்கோலம்
சுகாதார வளாகத்துக்கு பூட்டு; அச்சுறுத்தும் அங்கன்வாடி; பழநி நகராட்சி 1 வது வார்டில் அலங்கோலம்
ADDED : நவ 14, 2024 07:09 AM

பழநி ; மாதக்கணக்கில் பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம், சேதமான அங்கன்வாடி மையம் ,ரோட்டில் ஓடும் கழிவு நீர் என பழநி நகராட்சி 1 வது வார்டில் பிரச்னைகள் அதிகளவில் உள்ளன.
பெரியப்பாநகர், சக்திநகர், காமராஜர் நகர் பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டு முழுவதும் நாய் தொல்லை அதிகமாக உள்ளது.
வாகனங்களில் செல்வோர் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. சிறு நாயக்கன் குளத்தில் கழிவு நீர் கலப்பதால் கொசுத்தொல்லை அதிகம் உள்ளது.
சிறு நாயக்கன் குளத்தில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மாற்ற வேண்டும்.
ரோட்டில் ஓடும் கழிவு நீர்
ராஜன், ஆட்டோ டிரைவர், காமராஜர் நகர் : தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ள மேடை சேதமடைந்துள்ளது. தொட்டியுடன் இணைக்கப்பட்டுள்ள போர்வெல் மோட்டார் பழுதடைந்துள்ளது. சிறு நாயக்கன் குளம் செல்லும் சாக்கடையில் மழை காலங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை நீர் கழிவுநீருடன் ரோட்டில் செல்கிறது.
அச்சுறுத்தும் அங்கன்வாடி
முருகேசன், சலுான் கடை உரிமையாளர் : காமராஜர் நகரில் சுகாதார வளாகம் சேதமடைந்து பல மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. சாக்கடையும் சேதமடைந்து உள்ளது. இது போல் அங்கன்வாடி மையமும் சேதமடைந்து குழந்தைகளை அச்சுறுத்துகிறது.
தண்ணீர் வருவதில்லை
ரமேஷ் குமார், டீ கடை உரிமையாளர், பெரியப்பா நகர் : நகராட்சி குப்பை கிடங்கு இப்பகுதியில் உள்ளதால் . நகராட்சி பகுதி அனைத்து லாரிகளும் இப்பகுதியில் குப்பையை சிதறவிட்டு செல்கின்றன. இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .பெரியப்பா நகரில் ஜிகா பைப்லைன் அமைத்தும் தண்ணீர் வருவதில்லை.
விரைவில் சரி செய்யப்படும்
ராசு , கவுன்சிலர் , (அ.தி.மு.க.,) : காமராஜர் நகர் சுகாதார வளாகம் போர்வெல் மோட்டார் விரைவில் சரி செய்யப்படும். இங்குள்ள அங்கன்வாடி மையம், தண்ணீர் தொட்டி சரி செய்யப்படும். பெரியப்பா நகரில் நான்கு வீதிகளுக்கு செல்லும் மெயின் பைப் லைன் அடைக்கப்பட்டு வேறு லைனில் தரப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் அழுத்தம் குறைவாக செல்கிறது. இது குறித்து நகராட்சியில் தெரிவித்துள்ளேன் விரைவில் சரி செய்யப்படும். லாரிகளில் குப்பை அள்ளி செல்லும் போது குப்பை பறக்காத வண்ணம் பாதுகாப்புடன் செல்ல அறிவுறுத்துவேன் என்றார்.