UPDATED : ஜூலை 18, 2026 09:17 PM
ADDED : ஜூலை 18, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
பழநி:பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் லோக் ஆயுக்தா சட்டம் அறிவோம் கருத்தரங்கம் நடந்தது. லோக் ஆயுக்தா உறுப்பினர் ராமராஜ் பங்கேற்று பேசுகையில், 'அரசு பல்வேறு வரிவசூல் மூலம் கிடைக்கும் வருமானத்தில் நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. ஆனால் ஊழல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது.
நாட்டு மக்கள் லஞ்சத்திற்கு எதிரான இயக்கத்தை துவங்க வேண்டும். அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீதான லஞ்ச புகார்களை தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பு மூலம் விசாரணைக்கு உட்படுத்தலாம்' என்றார். கல்லுாரி முதல்வர் ரவிசங்கர், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
