/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மக்களின் நீண்ட நாள் தேவைகள்: மாவட்ட வளர்ச்சிக்கு உதவுமே...
/
மக்களின் நீண்ட நாள் தேவைகள்: மாவட்ட வளர்ச்சிக்கு உதவுமே...
மக்களின் நீண்ட நாள் தேவைகள்: மாவட்ட வளர்ச்சிக்கு உதவுமே...
மக்களின் நீண்ட நாள் தேவைகள்: மாவட்ட வளர்ச்சிக்கு உதவுமே...
ADDED : ஏப் 29, 2024 06:16 AM

லோக்சபா தேர்தல் பிரசார பணிகளை முடித்து ஓய்வுக்கு இன்று முதல் ஒரு வார காலத்திற்கு கொடைக்கானலில் தங்குவதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிறார். இந்த சமயத்தில் மாவட்டத்தின் தேவைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றால் தீர்வு கிடைக்குமென மாவட்ட மக்கள் எதிர்பார்த்து உள்ளனர். மாவட்டத்தில் பூ விவசாயம் பிரதானமாக இருப்பதால் தற்பொழுது பூவில் இருந்து வாசனை திரவியம் தயாரிக்கப்படும் மூலப் பொருளான 'கான்கிரீட்' என்ற திட படிமம் மட்டுமே நிலக்கோட்டை பகுதியில் தயாரிக்கப்படுகிறது. இதனை வாசனை திரவியமாக மாற்ற மும்பைக்கு செல்ல வேண்டி இருப்பதால் அதிக பணம்,நேரம் செலவாகிறது. செலவுகளை குறைக்க விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வாசனை திரவிய ஆலையை நிலக்கோட்டை சிப்காட்டில் துவங்க வேண்டும். அதேபோன்று முருங்கை, வாழை விவசாயமும் அதிக ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுவதால் விவசாயிகளின் ஏகத்தை போக்கும் வண்ணம் வாரியம் அமைத்திட வேண்டும்.
வாரியம் அமைத்தால் அதன் மூலம் ஏற்றுமதி யுக்திகள் தேவைகள் என அனைத்து வசதிகளையும் விவசாயிகளுக்கு செய்து கொடுக்கும் முடியும் என சங்கத்தினர் எதிர்பார்த்து இருக்கின்றனர். நிலக்கோட்டையில் 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே சப்-கோர்ட் அமைக்க மாநில அரசு உத்தரவிட்டும் அதற்கான நிதி கிடைக்காததால் புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கவில்லை. நிலக்கோட்டையில் சப்-கோர்ட் வந்தால் தொகுதியினர் திண்டுக்கல் செல்லும் நேரமும் செலவும் குறையும். வழக்கறிஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். இதற்கு முதல்வர் கவனம் செலுத்த வேண்டும். ஆண்டு தோறும் சபரிமலைக்கு செல்வோர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. திண்டுக்கல் குமுளி விரிவுபடுத்தப்பட்ட ரோட்டினை நான்கு வழி சாலையாக மாற்ற வேண்டும்.

