ADDED : பிப் 24, 2024 04:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார், :தாடிக்கொம்பு அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் கோகிலா 21. இன்ஜினியரிங் பட்டதாரி.
இவருக்கும் திருப்பூரை சேர்ந்த இவரது உறவினர் மகிபாலன் 24, என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மாறியது. பெண் வீட்டார் பெண் கொடுக்க மறுத்த நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் தங்கினர்.
இந்தநிலையில் பெண் வீட்டார் பெண்ணை காணவில்லையென வேடசந்துார் போலீசில் புகார் அளித்தனர்.
இதைத் தொடர்ந்து இருவரும் வேடசந்துார் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இரு தரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து விசாரணை நடத்திய எஸ்.ஐ., இருவரும் மேஜர் என்பதால் அவர்கள் விருப்பப்படி வாழலாம் என கூறி மணமக்களை சேர்ந்து வாழ அனுப்பி வைத்தார்.