/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விலை குறைந்த சுரைக்காய் விவசாயிகள் கவலை
/
விலை குறைந்த சுரைக்காய் விவசாயிகள் கவலை
ADDED : செப் 30, 2024 06:59 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சுரைக்காய் விலை அதிகரிக்காமல் பல நாட்களாக கிலோ ரூ.3க்கு மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையம், பொருளூர், தேவத்துார், மஞ்சநாயக்கன்பட்டி, சத்திரப்பட்டி, விருப்பாச்சி சுற்றியுள்ள பகுதிகளில் சுரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. 2 மாதங்களுக்கு முன் பயிரிடப்பட்ட சுரைக்காய் தற்போது அறுவடை செய்யப்படுகிறது. இதனால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகமாக இருப்பதால் கிலோ ரூ.3 வரை விற்பனையாகிறது. உரம், பூச்சி மருந்து, களையெடுப்பு அறுவடைகூலி என கணக்கு பார்த்தால் தற்போது விற்கும் விலை விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை. அதனால் கவலையடைந்தனர். சுரைக்காய் கிலோ ரூ.15க்கு மேல் விற்றால்தான் கட்டுபடியாகும் என விவசாயிகள் தெரிவித்தனர்.