sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கொடைக்கானலில் இயந்திர பயன்பாடு ‛'ஜோர்'; பாறைகள் தகர்ப்பால் நிலச்சரிவு அபாயம் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் காத்திருக்கிறது பேராபத்து

/

கொடைக்கானலில் இயந்திர பயன்பாடு ‛'ஜோர்'; பாறைகள் தகர்ப்பால் நிலச்சரிவு அபாயம் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் காத்திருக்கிறது பேராபத்து

கொடைக்கானலில் இயந்திர பயன்பாடு ‛'ஜோர்'; பாறைகள் தகர்ப்பால் நிலச்சரிவு அபாயம் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் காத்திருக்கிறது பேராபத்து

கொடைக்கானலில் இயந்திர பயன்பாடு ‛'ஜோர்'; பாறைகள் தகர்ப்பால் நிலச்சரிவு அபாயம் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் காத்திருக்கிறது பேராபத்து


ADDED : பிப் 19, 2025 03:59 AM

Google News

ADDED : பிப் 19, 2025 03:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடு அதிகமாக உள்ளது. பல இடங்களில் பாறைகள் தகர்க்கப்படுவதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.

அற்புதமான காலநிலை, இயற்கை எழில் கொஞ்சம் மலை முகடுகள், அருவிகள் என இயற்கையின் கொடையாலே' கொடைக்கானல் வாழ்கிறது. ஆனால் அந்த இயற்கைக்கு வேட்டு வைக்கும் செயல்கள் சமீபகாலமாக இங்கு நடந்துவருகிறது.

மலைத்தள பாதுகாப்பு விதியின் படி கொடைக்கானலில் நிலச்சரிவு அபாயம், இயற்கை சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கருதி அப்போதைய கலெக்டர் வள்ளலார் இம்மலைப் பகுதியில் ஆழ்துளை, பாறை தகர்ப்பு, கம்பரசர், மண் அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திர பயன்பாட்டிற்கு தடை விதித்தார். தற்போதும் இந்நடைமுறை அமலில் உள்ளது. ஆனால் செயலில் இல்லை.

இதை முறைகேட்டிற்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அதிகாரிகள், தடை இயந்திரங்களை தாராள பயன்பாட்டிற்கு அனுமதித்து வசூல் மழையில் நனைகின்றனர். மலைப்பகுதி முழுவதும் அனுமதியற்ற கட்டுமானங்கள், தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாடு என சுற்றுலா நகர் தற்போது கான்கிரீட் காடுகளாக உருமாறி விட்டது.

சில மாதங்களாக கொடைக்கானல் மலைப் பகுதியில் தடை செய்யப்பட்ட போர்வெல் பயன்பாடு, கம்ப்ரசர் கொண்டு துளையிட்டு வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்படும் சம்பவம், ராட்சஸ இயந்திரம் மூலம் மண் அள்ளுவது தாராளமாக நடக்கிறது. சின்னப்பலம் குடியிருப்பு பகுதியில் பாறைகள் வெடிவைத்து தகர்க்கப்பட்டு அதை கட்டுமான பணிக்கு விற்கும் போக்கு நீடிக்கிறது. இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் முழு ஆதரவு அளிப்பது ஆச்சரியம்.

வயநாடு நிலை வரும்


அதீத கனமழை பெய்யும் போது வயநாடு போன்று கொடைக்கானலும் நிலச்சரிவை சந்திக்கும் அபாயம் உள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அச்சப்படுகின்றனர்.

இயற்கை ஆர்வலர் பாலசுப்ரமணி கூறியதாவது: ஊட்டியில் இது போன்ற நிகழ்வால் அங்கு அவ்வப்போது நிலச்சரிவு , இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நிலையை கொடைக்கானலும் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் கொடைக்கானலுக்கு அவ்வப்போது வந்து செல்லும் நிலையில் இங்கு இயற்கை பேரழிவை ஏற்படுத்தும் கட்டுமானங்களுக்கு, பாறை தகர்ப்பு செயல்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அனுமதி சர்வசாதாரணம்


விவசாயி தனமுருகன் கூறியதாவது: சாதாரண விவசாயிகள் இயந்திர பயன்பாட்டிற்கு அனுமதி கோரினால் அதிகாரிகள் மாதக்கணக்கில் இழுத்தடிப்பர்.

ஆனால் பணம் படைத்தவர்கள் தடை செய்யப்பட்ட இயந்திர பயன்பாட்டிற்கு, சில லகரங்களை கவனிக்கும் நிலையில் சர்வ சாதாரணமாக மலைப்பகுதியை குடைந்து எடுக்க அனுமதி கிடைக்கிறது.

சாதாரண மக்களும் மலை தள பாதுகாப்பு விதிமுறைகளை எளிதில் புரிந்து கொள்ளும் விழிப்புணர்வு பிரசாரத்தையும், விவசாய பயன்பாட்டிற்கு இயந்திர பயன்பாடுகளை அரசு விதிகளுக்கு உட்பட்டு எளிதில் பயன்படுத்தும் வழிமுறைகளையும் அரசு ஏற்படுத்த வேண்டும்.

அந்நிய மரங்களை அகற்றி சோலை மரங்களை உருவாக்கும் முயற்சியிலும் அரசு ஆர்வம் காட்ட வேண்டும் என்பதும் விவசாயிகளின் கோரிக்கை என்றார்.

இயந்திரங்கள் பறிமுதல்


தாசில்தார் பாபு கூறுகையில்,'' தடை செய்யப்பட்ட இயந்திரங்களை பயன்படுத்துபவர்களுக்கு உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை அதிகாரிகளின் மீது நடவடிக்கை பாயும்.

வி.ஏ.ஓ. ,ஆர்.ஐ ., உள்ளிட்டவர்கள் அடங்கிய கூட்டம் நடத்தப்பட்டு இது போன்ற செயல் நடக்காத வண்ணம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதமும் விதிக்கப்படும்'' என்றார்.






      Dinamalar
      Follow us