/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதுரை ‛'வைகை'யை முந்தாமல் நெல்லை '‛வந்தே பாரத்'க்கு நேரம் திருச்சி-- திண்டுக்கல் ரயிலுக்கும் உதவும்

ADDED : டிச 28, 2025 04:10 AM
வடமதுரை: சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை ஓவர்டேக் செய்யாத விதத்தில் சென்னை - திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலுக்கு புதிய நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் திருச்சி - திண்டுக்கல் பயணி ரயிலின் தாமதம் தவிர்க்கப்படும்.
சென்னை எழும்பூரில் இருந்து தற்போது மதியம் 1:45 மணிக்கு புறப்படும் மதுரை வைகை எக்ஸ்பிரஸ் ரயில் ஜன., 1 முதல் மதியம் 1:15 மணிக்கே புறப்படுகிறது. சென்னை எழும்பூரில் மதியம் 2:45 மணிக்கு புறப்படும் திருநெல்வேலி வந்தே பாரத் ரயில் இனி மதியம் 3:05 மணிக்கு புறப்படும். இந்த நேர மாற்றத்தின் மூலம் சென்னை -மதுரை வைகை ரயில் வந்தே பாரத் ரயிலுக்கு வழிவிட இடைப்பட்ட ஸ்டேஷனில் ஒதுங்கி நிற்க வேண்டியிருக்காது.
சென்னையில் புறப்பட்டு காத்திருப்பு ஏதுமின்றி மதுரை சென்றடையும். இந்த நேர மாற்றத்தின் பலன் திருச்சி - திண்டுக்கல் பயணிகள் ரயிலுக்கும் கிடைக்கிறது. தற்போது வைகை, வந்தே பாரத் என இரு எக்ஸ்பிரஸ்களுக்கு வழிவிட அதிக நேரம் இடைப்பட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நிறுத்தப்படும். இனி இந்த ரயில் வைகைக்கு மட்டும் வழிவிட்ட பின்னர் விரைவாக திண்டுக்கல் சென்றடைய முடியும்.