/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மதுரைவீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
/
மதுரைவீரன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்
ADDED : நவ 15, 2024 05:49 AM

கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே சக்கிலியான்கொடை மதுரைவீரன், வேட்டைக்காரன், ஆண்டிச்சாமி, ஏழு கன்னிமார்,முத்தாலம்மன்,பகவதி அம்மன், காளியம்மன் கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
இதையொட்டி கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் பூஜைகள் நடந்தது.
3-ம் நாள் காலை விநாயகர் பூஜை,4ம் கால யாக பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடந்தது. மேளதாளம் முழங்க யாகசாலையில் வைக்கப்பட்டிருந்த புனித தீர்த்த குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன.
கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்ற பூஜை , தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அப்போது வானத்தில் கருடன்கள் வட்டமிட்டது.
இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பூஜை மலர் ,புனித தீர்த்தம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை சக்கிலியான்கொடை, மாமரத்துபட்டி பொதுமக்கள் செய்திருந்தனர்.