/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள்
/
மகாளய அமாவாசை: ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள்
ADDED : அக் 01, 2024 05:40 AM
திண்டுக்கல்: மகாளய அமாவாசையை முன்னிட்டு திண்டுக்கல் டூ ராமேஸ்வரத்திற்கு இன்று இரவு முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
மகாளய அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் ராமேஸ்வரம் சென்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்கின்றனர். இதற்காக திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழகம் சார்பில் இன்று இரவு முதல் திண்டுக்கல் முதல் ராமேஸ்வரத்திற்கு 50க்கு மேலான சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதோடு அக்.2 விடுமுறை என்பதால் திண்டுக்கல் முதல் சென்னைக்கு 30க்கு மேலான பஸ்கள் இயக்கப்படுகிறது. பயணிகளுக்கு உதவ பஸ் ஸ்டாண்ட்களில் போக்குவரத்து துறை அதிகாரிகள் பணியில் ஈடுபட உள்ளதாக திண்டுக்கல் மண்டல போக்குவரத்து கழக பொதுமேலாளர் சசிக்குமார் தெரிவித்தார்.