/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சீரமைக்கலாமே n மாவட்டத்தில் சேதமடைந்த மின்கம்பங்களை n துறைரீதியான ஆய்வோடு தேவை நடவடிக்கை

ADDED : பிப் 01, 2024 04:20 AM

மாவட்டத்தை பொறுத்தவரையில் தென் மாவட்டங்களின் இணைப்பு பாலமாக இருப்பதோடு பழநி, கொடைக்கானல், சிறுமலை மட்டுமல்லாது அருவிகள், அணைகள், நீர்தேக்கங்கள் என பல்வேறு இடங்களை உள்ளடக்கி உள்ளது.
இதனால் வெளியூர் பயணிகளின் வருகை அதிகமாக உள்ளது. இதேபோல் நகர் பகுதிகளிலும் போக்குவரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் விபத்து, காலவரை முடிந்தது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மின்கம்பங்கள் பலவும் சேதமடைந்துள்ளன. முன்பு போடப்பட்டிருந்த இரும்பு போஸ்ட் கம்பங்கள் துருப்பிடித்து காணப்படுகின்றன.
சிமென்ட், கம்பிகளால் ஆனா கம்பங்கள் பலவும் சிதிலமடைந்துள்ளன.
இதனால் பல நேரங்களில் மின் தட்டுப்பாடோடு அவ்வப்போது விபத்தும் ஏற்படுகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், சுற்றுலா, ஆன்மிக தலத்திற்குச் செல்லக்கூடிய ரோடுகள் போன்றவற்றில் உள்ள மின் கம்பங்களை ஆய்வு செய்ய வேண்டும். நகர் பகுதிகளில் புதிதாக மின்கம்பங்கள் அமைத்தே பல ஆண்டுகள் ஆகிறது. இவற்றை எல்லாம் பழுது பார்க்க வேண்டும். தேவைப்படின் புதிய கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெயில் காலம் தொடங்கி விட்டதால் இது போன்ற காலங்களில் இந்த பணிகளை மேற்கொள்ளலாம். இப்போதே சரி செய்துவிட்டால் மழை காலங்களில் சிரமம் ஏற்படுவதை தவிர்க்க முடியும்.