/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நுாதன முறையில் பெண்ணிடம் ரூ 1.50 லட்சம் பறித்தவர் கைது
/
நுாதன முறையில் பெண்ணிடம் ரூ 1.50 லட்சம் பறித்தவர் கைது
நுாதன முறையில் பெண்ணிடம் ரூ 1.50 லட்சம் பறித்தவர் கைது
நுாதன முறையில் பெண்ணிடம் ரூ 1.50 லட்சம் பறித்தவர் கைது
ADDED : நவ 25, 2025 04:08 AM
ஒட்டன்சத்திரம்: உறவினர் போல் அலைபேசியில் பேசி பெண்ணிடம் இருந்து ரூ. 1.50 லட்சம் பறித்தவரை ஒட்டன்சத்திரம் போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் அருகே திருக்காட்டுப்புதுாரை சேர்ந்த நடராஜன் மனைவி செல்வமணி 50. சில தினங்களுக்கு சென்னையில் இருந்து அலைபேசியில் தொடர்பு கொண்ட நபர் உறவினர் போல் பேசி உள்ளார்.
தனக்கு கடன் பிரச்னை உள்ளதாகவும் ஒருவரை அனுப்புகிறேன் அவரிடம் ரூ.1.50 லட்சம் கொடுத்து அனுப்ப கூறி உள்ளார். இதை நம்பிய செல்வமணி நவ.21ல் ஒட்டன்சத்திரத்தில் உள்ள வங்கி ஒன்றில் ரூ.1.50 லட்சம் எடுத்து உறவினர் அனுப்பியதாக கூறியவரிடம் கொடுத்துள்ளார். உறவினரிடம் செல்வமணி இந்த தகவலை தெரிவித்த போது நான் யாரிடமும் பணம் கேட்கவில்லை, பணத்தை கொடுக்கவும் சொல்லவில்லை என தெரிவித்தார்.
ஏமாற்றப்பட்டதை உணர்ந்த செல்வமணி ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுப்படி சிவகங்கை மாவட்டம் கூட்டுறவு பட்டியை சேர்ந்த அருண் பிரகாஷ் 39, என்பவர் செல்வராணியிடம் இருந்து பணத்தை பெற்று சென்றது தெரிந்தது.
அருண்பிரகாஷை கைது செய்த போலீசார் ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

