/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கல்லுாரி மாணவி படத்தை ஆபாசமாக பகிர்ந்தவர் கைது
/
கல்லுாரி மாணவி படத்தை ஆபாசமாக பகிர்ந்தவர் கைது
ADDED : டிச 18, 2025 06:14 AM

சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே காதலித்த கல்லுாரி மாணவி பேச மறுத்ததால் அவரது படத்தை ஆபாசமாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த காதலன் கைது செய்யப்பட்டார் .
திண்டுக்கல் அருகே குட்டத்து ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஜெயசீலன் 25. சாணார்பட்டி அருகே உள்ள கல்லுாரி மாணவியிடம் நெருக்கமாக பழகி காதலித்து வந்துள்ளார். மாணவி அவரது புகைப்படங்களை காதலன் ஜெயசீலனுக்கு அனுப்பி உள்ளார். ஜெயசீலனின் பழக்கவழக்கங்கள் மாணவிக்கு பிடிக்காததால் அவரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னிடம் பேசுமாறு மாணவியை ஜெயசீலன் வற்புறுத்தி உள்ளார். மறுத்ததால் ஆத்திரமடைந்த ஜெயசீலன் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவி பெற்றோரிடம் கூறி உள்ளார். சாணார்பட்டி மகளிர் போலீஸ் எஸ்.ஐ., பிரதீபா ஜெயசீலனை கைது செய்தார்.

