/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜாமினில் வந்து தலைமறைவான வழக்கில் தொடர்புடையவர் கைது
/
ஜாமினில் வந்து தலைமறைவான வழக்கில் தொடர்புடையவர் கைது
ஜாமினில் வந்து தலைமறைவான வழக்கில் தொடர்புடையவர் கைது
ஜாமினில் வந்து தலைமறைவான வழக்கில் தொடர்புடையவர் கைது
ADDED : நவ 28, 2024 06:19 AM
ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் ஜாமினில் வெளிவந்து தலைமறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஒட்டன்சத்திரம் தனியார் மதுபான கடையில் 2023 மே 28 அன்று வினோபாநகரைச் சேர்ந்த சுபாஷ் 23, மது அருந்தி கொண்டிருந்தார். அருகில் மது அருந்திக் கொண்டிருந்த தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த முருகேஸ்வரனுடன் 36 , ஏற்பட்ட தகராறில் சுபாஷ் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
ஒட்டன்சத்திரம் போலீசார் சுபாஷை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். நான்கு மாதங்களுக்கு முன்பு சுபாஷிற்கு ஜாமின் வழங்கிய மதுரை உயர்நீதிமன்றம் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜராகி கையெழுத்திட உத்தரவிட்டது.
சிறையில் இருந்து வெளிவந்த சுபாஷ் மூன்று நாட்கள் மட்டுமே கையெழுத்திட்ட நிலையில் அதன்பிறகு தலைமறைவானார். அவரை கைது செய்ய ஒட்டன்சத்திரம் நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி எஸ்.ஐ ., வடமுத்து தலைமையிலான போலீசார் கணக்கன்பட்டியில் பதிங்கியிருந்த சுபாைஷ கைது செய்தனர்.