/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கேனில் பெட்ரோல் வாங்கி சென்றவர் பலி
/
கேனில் பெட்ரோல் வாங்கி சென்றவர் பலி
ADDED : மார் 27, 2025 04:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: கோபால்பட்டி அருகே கொரசின்னம்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் பத்மநாபன் 18, ஆண்டிச்சாமி மகன் அலெக்ஸ் 17.
இருவரும் டூவீலரில் கோபால்பட்டி சென்று ஒரு லிட்டர் பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கி விட்டு கணவாய்பட்டி பங்களா அருகே வந்த போது அதே பகுதியை சேர்ந்த சிறுவன் சாலையின் குறுக்கே சென்றுள்ளார். சிறுவன் மீது மோதியதில் கேனிலிருந்த பெட்ரோல் சாலையில் கொட்டியதில் தீ பற்றியது.
சிறுவர்கள் மீதும் தீ பற்றியது. மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு பத்மநாபன் இறந்தார். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.