/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஜாமினில் வந்தவர் தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயம்
/
ஜாமினில் வந்தவர் தற்கொலை கடிதம் எழுதிவிட்டு மாயம்
ADDED : ஆக 08, 2025 03:14 AM
வேடசந்துார்: தாடிக்கொம்பு இடையகோட்டை ரோட்டில் கடை உரிமையாளரின் பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோவில் கைதாகி ஜாமினில் வந்தவர் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானார்.
அகரம் உலகம்பட்டி மேற்கு கொட்டத்தை சேர்ந்தவர் சகாய ஆரோக்கிய மேரி மகன் தொழிலாளி அஜித் அமலஜீவன் 28. தாடிக்கொம்பு இடையகோட்டை ரோட்டில் கடை வைத்துள்ள ஒருவரிடம் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தார்.அங்கு உரிமையாளர் மகளிடம் பழகி கடத்தி சென்றார். பெண்ணின் தந்தை வேடசந்துார் போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து அஜித் அமலஜீவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். ஜாமினில் வந்தவர் மீண்டும் அதே பெண்ணை கடத்திச் சென்றார். இதன் பின் போக்சோ சட்டத்தில் மீண்டும் அஜித் அமலா ஜீவன் கைது செய்யப்பட்டார்.
மீண்டும் ஜாமினில் வந்தவர் ஆக. 5ல் காணாமல் போனார். இதனிடையே அமலஜீவன் தற்கொலை செய்வதாக வீட்டில் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமானதாகவும் , பூச்சி மருந்து வாங்கியதற்கான ரசீது உள்ளதாகவும் தாய் சகாய ஆரோக்கியமாரி மேரி வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார். வேடசந்துார் எஸ்.ஐ., வேலாயுதம் விசாரிக்கிறார்.

